Tuesday, July 14, 2009

ஏன் இந்த மாற்றம்?

என்ன இது இப்படி ஒரு மாற்றம்

அன்று நீ
தேவதையென அழகாய்த் தெரிந்தாய்
எங்கே போனது அழகத்தனையும்?
நேற்று நீ
வாசல் நிறைந்த கோலம் போலிருந்தாய்
கலை அறியாமல் கலைத்துச் சென்றது யார்?
சற்று முன்
சிந்தை மயக்கும் காவியமாய் மிளிர்ந்தாய்.
ஏனிப்படி சிதைந்து போன சித்திரமானாய்.?
நாளுக்கொரு வேஷம் போடுகிறாய்
மணிக்கொரு வடிவம் ஏந்துகிறாய்
நொடிக்கொரு உருவம் காட்டுகிறாய்
உன்னை அலைக்கழிப்பது யார்?
கோடானு கோடி நட்சத்திரங்களா?
தேய்ந்து வளரும் வெண்ணிலவா?
சுட்டெரிக்கும் சூரியனா
சொல்லுங்களேன்
வெண்பட்டு மேகங்களே


6 comments:

நானானி said...

காற்று,
உங்களுக்கு இரண்டு விருதுகள் வழங்கியிருக்கிறேன். என்பதிவில் சென்று பார்க்கவும்.

காற்று said...

நானானி
நன்றி
அடடா ,முளைத்து மூணு இலை விடும் முன் அவார்டா .இதுதான் பார்ன் வித் சில்வர் ஸ்பூனா?

சகாதேவன் said...

நீங்கள் கோல்டன் ஸ்பூனுடன் பிறந்தவர்.
நானானியால் அறிமுகமான நண்பரே, வாழ்த்துக்கள்.

//வாசல் நிறைந்த கோலம் போலிருந்தாய்
கலை அறியாமல் கலைத்துச் சென்றது யார்?//

காற்றாகக் கூட இருக்கலாம். தென்றலாகச் செல்லுங்கள்.

காற்று said...

சகாதேவன் தங்கள் எழுத்தில் கவிதையும் இணைகிறதே.
வாழ்த்துக்கு நன்றி

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment